தமிழகம்

திருவள்ளூவரில் சென்னை மணலிருந்து டீசல் ஏற்றிவந்த சரக்கு ரயில்பெட்டியில் பெரும் தீ விபத்து

135views
சென்னை மணலி புதூரில் இருந்து 52 சரக்கு பெட்டிகளில் டீசல் ஏற்றிகொண்டு ஜோலார்பேட்டை சென்ற சரக்கு ரயில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5.20 மணியளவில் திருவள்ளுவர் ரயில்நிலையத்தை கடந்து சுமார் 2 கிலோமீட்டர் சென்றபோது ரயில்பெட்டி 3 தடம்புரண்டதில் ஊராய்வு ஏற்பட்டு தீ பிடித்தது.10 பெட்டிகளுக்கு மேல் தீ பிடித்த நிலையில் மற்ற பெட்டிகளை அகற்றும் பணியை ரயில்வே ஊழியர்கள் செய்துவருகின்றனர். அப்பகுதியில் அனைத்து ரயில்சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கரும்புகை காரணமாக 2 கி.மீ. தொலைவில் உள்ள குடியிறுப்பு வாசிகளை பத்திரமாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீவிரமாக ரயில்வே பணியாளர்கள் வேலையில் ஈடுப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!