தமிழகம்

வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையை முழுமையாக செயல்படுத்த கோரி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது !!

170views
வேலூர் அரசு பென்ட்லேண்ட் பல்நோக்கு மருத்துவமனை கடந்த மாதம்இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 – மாடி கட்டிடத்தை திறந்துவைத்தார். அப்போது எந்தவித மருத்துவ உபகரணங்களும் அமைக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள், பணியாளர்களை நியமித்து உடனே திறக்க வேண்டும்என்றும் கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 8-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் வேலூரில் அதிமுகவினர் நடத்துவார்கள் என்று அறிக்கை வெளியிட்டார்.
அதன்படி வேலூர் அதிமுக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் ராமு, மாவட்ட செயலாளர் அப்பு, மற்றும் நிர்வாகிகள் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்..ஆனால் காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி அதிமுகவினரை விரட்டி, விரட்டி பிடித்து காவல்துறை வண்டியில் ஏற்றினர். ஏறாதவர்களை குண்டுகட்டாக தூக்கினர்.
இதில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, காட்பாடி ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ், சின்னதுரை, சைலஜம், பகுதி செயலாளர் நாராயணன், வேலூர் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் எழிலரசன், அதிமுக மாநகராட்சி கவுன்சிலர் ரமேஷ், வண்டறந்தாங்கல் கிராம பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், சோளிங்கர் (மேற்கு ) ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளர் ஆனந்தன், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சுமார் 300 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை தனித்தனியாக தனியார் மண்டபங்களில் அடைத்துவைத்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!