தமிழகம்

வேலூரில் 197 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு பென்ட்லேண்ட் பல் நோக்கு மருத்துவமனையை திறந்துவைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் !!

121views
வேலூரில் பழைய பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 197 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் பல் நோக்கு மருத்துவமனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று புதன்கிழமை திறந்துவைத்தார். அதற்கு முன்பாக முதல்வர் காலையில் தனி ரயில்பெட்டி மூலம் (ஷீரடி விரைவு ரயிலில் இணைப்பு) காட்பாடிக்கு பகல் 12.15 மணிக்கு வந்த முதல்வருக்கு அமைச்சர்கள், ஆட்சியர் புத்தகம் கொடுத்துவரவேற்றனர். பின்காட்பாடி ரயில்நிலையத்திலிருந்து மருத்துவமனை வரை திமுகவினர் வரவேற் கொடுத்தனர்.பின் மருத்துவமனையை திறந்துவைத்து பார்வையிட்டனர்.

இதில் நல்வாழ்வு துறைஅமைச்சர் சுப்பிரமணியம், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு, கைத்தறி அமைச்சர் காந்தி, சிறுபான்மை துறை அமைச்சர் நாசர், மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், பொதுப்பணி துறை கூடுதல் செயலாளர் மங்கத்ராம் சர்மா,ஆட்சியர் சுப்புலெட்சுமி பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மருத்துவர்கள், துறை சம்மந்தப்பட்டவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!