தமிழகம்

வேலூர் அடுத்த வள்ளிமலை மற்றும் இரத்தினகிரி முருகன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை பக்தர்கள் சிறப்பு வழிபாடு

191views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிசுவாமி திருக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. காலை மற்றும் மாலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் உள்ள இரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலில் முருகன், சமேத வள்ளிதெய்வானைக்கு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!