தமிழகம்

வேலூர் நீதிமன்றததில் முருகன் ஆஜர், நளினி சந்திப்பு

139views
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த வருடம் விடுதலையாகிய முருகன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் உள்ளார். வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது ஆய்வு நடத்த வந்த காவலர்களை பணிசெய்யவிடாமல் தடுத்த வழக்கில் முருகன், வேலூர் நீதிமன்றம் 4 -வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. திருச்சி முகாமிற்கு அழைத்து செல்வதற்கு முன், முருகனை அவர் மனைவி நளினி சிறிது நேரம் சந்தித்து பேசினார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!