தமிழகம்

மதுரையில் 21 வயது இளைஞரை வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மர்ம கும்பல்; போலீசார் விசாரணை

377views
மதுரை விளாங்குடி அடுத்துள்ள கரிசல்குளம் மந்தை திடல் அருகே கட்டட வேலை செய்து வரும் பூமிநாதன் எனும் 21 வயது மதிக்கதக்க இளைஞரை இன்று மாலை வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவரை வீடு புகுந்து நான்கு பேர் கொண்ட கும்பல் தலை கைகளில் சுமார் 20 முறை வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் மதுரை கூடல் புதூர் காவல்நிலையத்திற்க்கு அளித்த தகவலின் படி பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!