தமிழகம்

தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்க கூட்டம்; பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்த முக்கிய தீர்மானம்

246views
தென்காசி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை, 2023 ஆம் ஆண்டு டைரி மற்றும் மாத, தினசரி காலண்டர்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசி பத்திரிகையாளர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சு.இராசேந்திரன் தலைமை தாங்கினார்.
தென்காசி பிரஸ் கிளப் தலைவர் கணபதி. பாலசுப்பிரமணியன் மற்றும் தென்காசி மாவட்ட பிரஸ் கிளப் தலைவர் பா.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கு. வெங்கட்ராமன் கலந்து கொண்டு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஒற்றுமை குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் எம். சண்முகம் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் புளியங்குடி மகேஸ்வரன், கடையநல்லூர் வெள்ளத்துரை, சுரண்டை வீனஸ் முருகேசன் மற்றும் புளியரை முத்துகிருஷ்ணன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பத்திரிகையாளர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்திட உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதோடு, பத்திரிகையாளர் நல வாரியத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், அதனை ஏற்றுக் கொண்ட தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் தமிழக முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு வழங்கி வரும் அனைத்து சலுகைகளையும் வட்டார அளவில் பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வழங்கிட வேண்டும். வரும் 14.02.2023 அன்று தென்காசி மாவட்ட மூத்த பத்திரிகையாளர் எம். சண்முகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தவும், சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டிஎஸ்ஆர். சுபாஷ் மற்றும் நிர்வாகிகளை அழைப்பது என்றும், அந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 50 பத்திரிகையாளர்களுக்கு சிறந்த பத்திரிகையாளர் விருது வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தென்காசி பத்திரிகையாளர்கள் கு. அருணாசலம், ச‌.முத்துக்குமார், தங்கராஜ், குமார், பாலசுப்பிரமணியன், குத்தால பெருமாள், ஏ.ஜி.எம். கணேசன், திருவிலஞ்சிக்குமரன், ச.திருமலை ராம்குமார், மு. தொல்காப்பியன், செங்கோட்டை கனியத்தா, கண்ணன், போட்டோ கண்ணன், ராஜா, சங்கர், கோதர்ஷா ஆகியோருடன் கடையநல்லூர் அல்லித்துரை, புளியங்குடி வீரய்யா, முத்துசாமி, ஈஸ்வரன், வாசுதேவநல்லூர் நவநீதகிருஷ்ணன், சிவகிரி பெரியாண்டவர், பாலசுப்பிரமணியன், பாவூர்சத்திரம் மணிகண்டன், மாரியப்பன், சங்கரபாண்டியன், காலசாமி, சந்திரன், சுரண்டை ஹரிராம், ஆலங்குளம் அ.ராமலிங்கம், வேல்ராஜ், தங்கராஜ், செய்யது அலி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் 2023 ஆம் ஆண்டு டைரி, மற்றும் 2023 ஆம் ஆண்டு மாத காலண்டர், தினசரி காலண்டர் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. முடிவில் தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கே.எஸ்.கணேசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!