தமிழகம்

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

266views
தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, மின் கண்டன உயர்வு, பால், நெய் விலை உயர்வு,தாலிக்கு தங்கம் ரத்து செய்த திமுக அரசை கண்டித்து மாநகராட்சி பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ், சின்னதுரை, பகுதி செயலாளர்கள் ஜனார்த்தனன், நாராயணன், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன், மாநகராட்சி அதிமுககவுன்சிலர் காங்கேயநெல்லூர் ரமேஷ், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், சோளிங்கர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி கே.ஆர்.பாபு, பிரம்மபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் ராமமூர்த்தி, புகழ்வேந்தன், கிளை செயலாளர் நேதாஜி, மற்றும் மகளிர் அணியினர், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!