தமிழகம்

சோழவந்தான் அருகே குருவித்துறை அருள்மிகு பேச்சியம்மன் கோவில் மறு பூஜை விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

251views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் பிரசித்தி பெற்ற பேச்சியம்மன் கோவில் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முளைப்பாரி ஊர்வலமும் பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர். தொடர்ந்து மறுபூஜை நடைபெற்றது. விழாவை ஒட்டி அம்மனுக்கு பால் தயிர் நெய் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் செய்யப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டு தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பேச்சியம்மன் இறைப்பணிச்சங்கம். மற்றும் ஶ்ரீ பேச்சியம்மன் கோவில்பக்தர்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!