தமிழகம்

சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் கார்த்திகை மாத உற்சவ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

167views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் கார்த்திகை மாத உற்சவ விழா முளைப்பாரி விழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன் நேற்றுமுன்தினம் இரவு சர்வ அலங்காரத்துடன் ஊர்வலம் நடைபெற்றது அப்போது பக்தர்கள் தங்கள் வீட்டின் முன்பாக மாவிளக்கு எடுத்து அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர். இரவு அயன் குருவித்துறை ஸ்ரீ பேச்சியம்மன் இறைபணி சங்கம் மற்றும் பழனி பாதயாத்திரை குழு சார்பாக அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. மேலும் மராமத்து பணி சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவில் ஸ்ரீ பேச்சியம்மன் இறைப்பணி சங்கத்தின் சார்பாக செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. நேற்று காலை 6 மணி அளவில் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்று திருக்கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அயன் குருவித்துறை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!