தமிழகம்

கஜ பூஜைக்கு என அனுமதிபெறப்பட்ட யானைகள் அமைச்சரின் மகன் திருமணத்திற்கு பயன்படுத்தப்பட்டதா? ஆர்டிஐல் வெளியான அதிர்ச்சி தகவல் – தொடரும் சர்ச்சையில் சிக்கும் அமைச்சர் மூர்த்தி

134views
மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான பி. மூர்த்தி அவர்களின் மூத்த மகனான பி எம் தியானேசுவின் திருமண விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இந்த திருமண விழாவிற்காக பல கோடி ரூபாய் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விழாவில் முதல்வரை வரவேற்கும் வகையில் கேரளாவில் இருந்து சாது மற்றும் நாராயண குட்டி என்ற இரண்டு ஆண் யானைகள் வரவழைக்கப்பட்டு நுழைவாயில் முழுவதும் கரும்பு மற்றும் வாழை வாழையால் அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது,
தனியார் விழாக்களில் யானைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் அமைச்சரின் மகன் திருமணவிழாவிற்கு யானை எப்படி கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பாக சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுள்ள கேள்வியில்
வளர்ப்பு யானைகள் திருமண நிகழ்வில் பங்கேற்க அனுமதி உண்டா என்ற கேள்விக்கு  அனுமதி இல்லை என வனத்துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மதுரை மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களில் இருந்து கடந்த”2022 ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி வரை வளர்ப்பு யானைகள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு
கேரளா மாநிலத்தில் இருந்து,மதுரைக்கு இரண்டு யானைகள் கஜபூஜைக்கு கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டது எனவும் பதில் அளித்துள்ளனர்.
மேலும் மதுரையில் 2022 செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற திருமண விழாவிற்காக கேரளாவில் கொண்டுவரப்பட்ட யானைகளை கண்காணிக்க மதுரை வன சரகம் சார்பாக நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள் பெயர் மற்றும் பதவி விவரங்களை தகவலாக தரவும் என்ற கேள்விக்கு மதுரை வனக்கோட்ட வன உயிரினசரக வனச்சரக அலுவலர் என பதில் அளித்துள்ளனர்.
இந்த தகவல் அறியும் உரிமை சட்ட கேள்விக்கான பதிலில் இரு யானைகள் கேரளாவில் இருந்து கஜபூஜைக்கு கொண்டுவந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் செப்-9ஆம் தேதி திருமண விழாவில் பங்கேற்ற யானைகள் கண்காணிக்கப்பட அதிகாரிகள் குறித்து கேள்விக்கும் பதில் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சரை வரவேற்பதற்காக கஜபூஜை என்ற பெயரில் கேரளாவில் இருந்து யானைகள் அழைத்து வரப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது இந்நிலையில் அமைச்சரின் மகன் திருமணவிழாவில் எந்த அடிப்படையில் திருமண விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது
கஜ பூஜை என்ற பெயரில் கேரளா வனத்துறையும் ஏமாற்றி இரண்டு யானைகளை தமிழகத்திற்கு அழைத்து வந்து சட்டவிரோதமாக தமிழக முதலமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் பயன்படுத்தப்பட்டதா? கேரளா அரசை மட்டுமல்லாமல் தமிழக அரசையும் ஏமாற்றி கஜ பூஜைக்காக கொண்டுவரப்பட்ட யானைகள் எங்கே சென்றது என்ற பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இது தொடர்பான விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

20ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட திருமணம் ஏற்பாடு கோடி கோடியாக பணத்தை கொட்டி சாப்பாடு என சர்ச்சைக்கு ஆளான அமைச்சரின் திருமணத்திற்கு யானைகள் கொண்டுவரப்பட்டதும் சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!