தமிழகம்

சாலை விபத்தில் கடலாடி எஸ்ஐ பலி

125views
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிச்சைமணி, 50. நேற்றிரவு இவர் இரு சக்கர வாகனத்தில் ரோந்து பணி சென்றார்.  கடலாடி அரசு மேல்நிலை பள்ளி அருகே சென்றபோது எதிரே இரு சக்கர வாகனத்தில் மதுபோதையில் வந்த இந்திரா நகர் காளி என்பவர் நேருக்கு நேர் மோதினார். இதில் படுகாயம் அடைந்த சார்பு ஆய்வாளர் பிச்சை மணியை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கடலாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!