தமிழகம்

மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

117views
இவ் மனித உரிமை நாள் உறுதிமொழியை மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) வெற்றி செல்வன் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டு கீழ்க்கண்டவாறு மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்த தக்க பன்னாட்டு சட்டங்களிலும், வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமாற உறுதிமொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன், என்னுடைய எண்ணம் சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்த ஒரு செயலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்ய மாட்டேன், மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன். என உறுதிமொழி ஏற்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!