தமிழகம்

மாநகராட்சி பேருராட்சிகளில் தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்ககூடாது ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

111views
அலங்காநல்லூரில் உள்ள சமுதாயக்கூட வளாகத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதற்கு தூய்மை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் காளிமுத்து மாவட்ட செயலாளர் ரங்கசாமி மாவட்டத் துணைத் தலைவர் ராமசாமி மூர்த்தி சுப்பையா ஆகியோர்முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள்தொகுதி செயலாளர் சிந்தனை வளவன் வரவேற்றார். தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்கத் தலைவர் பிச்சைமுத்து சிறப்புரை ஆற்றினார். இதில் 15 நபர்கள் கொண்ட மாவட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு மாவட்ட பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கம் அமைத்து செயல்படுவது அரசாணை எண் 115 139 152 இல் உள்ள பேரூராட்சி மாநகராட்சி பகுதியில் பகுதி நேரமாக பணியாற்றும் கீழ்த்தள பணியாளர்களை நீக்கி தனியார் மயமாக்கும் அரசானையை திரும்ப பெற வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி.மாவட்ட ஆட்சியர்.அலுவலகம் முன்பு 10 அம்சங்கள் உட்பட 3 அரசாணைகளை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முடிவில் தொழிலாளர்கள் விடுதலை முன்னணியின் நிர்வாகி ஆதி வீரபாண்டியன் நன்றி கூறினார் ஆ போஸ் விசிக மாநில செயலாளர் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு தொழிற்சங்கம் சி மோகன் மாநில துணைச் செயலாளர் சா மாரி மாநகர மாவட்ட செயலாளர் வேல் ஜி முருகன் பொன் கிருஷ்ணன் சி ஐ டி யு காட்டுராசா எஸ்சி எஸ்டி மாவட்ட தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!