தமிழகம்

முன்னாள் படைவீரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி

110views
முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் முப்படை வீரர் கொடி நாள் தினத்தையொட்டி முன்னாள் படை வீரர்கள், வாரிசுதாரர்களுக்கான நலத்திட்ட உதவி மற்றும் தேநீர் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்களுடன் தேநீர் விருந்தில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கி பேசினார்.
ராணுவ வீரர்களின் பணிகள் குறித்து நேரடியாக பார்க்கும் பொழுது ஒவ்வொருவருக்கும் மெய்சிலுக்க வைக்கும் அளவிற்கு இருக்கும். பொதுவாக நாம் ஒரே இடத்தில் ஒரு மணி நேரம் இருப்பது என்பது சிரமமாக இருக்கும். ஆனால் பல மணி நேரம் ஒரே இடத்தில் கண்காணிப்பு பணி பார்ப்பது என்பது மிகக் கடினம். அத்தகைய கடினமான பணியை பார்த்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் மிக உன்னத பணியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு நாம் என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம். அது மட்டுமின்றி அவர்களின் அத்தியாவசிய தேவைகளான குடிநீர் தேவை, வீட்டு மனை பட்டா மாற்றம் போன்ற முக்கிய தேவைகளை எப்பொழுது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். மாவட்ட ஆட்சியர் என்ற முறையில் உங்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர தயாராக இருப்பதுடன் மற்ற துறைகளின் மூலம் பெறக்கூடிய திட்டங்களை உடனுக்குடன் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் வாரிசுதாரர்கள் தங்களின் தேவைகளை மாவட்ட நிர்வாகம் மூவம் பயன் பெற்றுக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.
பயனாளிகள் 10 பேருக்கு தொகுப்பு நிதி கல்வி உதவி தொகையாக ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நலத் திட்டங்களை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன்,  உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயனா சர்மா, முப்படை வாரிய துணைத் தலைவர் நடராஜன், முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் மதியழகன், முன்னாள் படைவீரர் நலத்துறை கண்காணிப்பு அலுவலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!