தமிழகம்

திருமங்கலத்தில் தனியார் இணையதள வயர் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலை, செம்மைப்படுத்தாமல் ஆங்காங்கே பள்ளங்களாக தென்படுவதால் விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம்.

248views
மதுரை மாவட்டம் திருமங்கலம் – உசிலம்பட்டி சாலையில் தனியார் இணையதள கேபிள் பதிக்கும் பணிக்காக , ஆங்காங்கே சாலையை பெயர்த்து எடுக்கப்பட்டு பள்ளங்களாக தோண்டப்பட்டு , பணியில் முடிவடைந்த பின் பள்ளங்களை செம்மை படுத்தாமல்அப்படியே விட்டு சென்றதால், பொதுமக்கள் நடந்து செல்லும் போது கீழே விழுந்து காயம் ஏற்படுவதுடன், வாகன ஓட்டிக்களுக்கும் கீழே விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், உடனடியாக சீர் செய்ய அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் மக்கள் வரிப்பணத்தில் போடப்பட்ட பேவர்பிளாக் சாலை சேதமடைந்து, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்,
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!