தமிழகம்

அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

155views
மதுரை கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற எல் கே பி நகர் பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார்., ஆசிரியை மனோன்மணி வரவேற்றார்.,
தனிநபர் நடனமாடிய மாணவி கவிதா அவர்களுக்கு பலசரக்கு மற்றும் மளிகை பொருட்களை திருப்பரங்குன்றம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சையது முகமது சாதுலி அவர்கள் வழங்கினார்., போட்டிகளில் வெற்றி பெற்ற, கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளையும் வாழ்த்தி ஆசிரியை அகிலா சிறப்புரை வழங்கினார்.
ஆசிரியை விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார்.  ஆசிரியை அனுசியா நன்றி கூறினார்.  விழாவிற்கான ஏற்பாடுகளை அருவகம், சித்ரா, தமிழ்செல்வி ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!