தமிழகம்

சாத்தூர் அருகே, குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

109views
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள முத்தால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (53). கூலி வேலை பார்த்து வரும் இவர், கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து குழந்தையின் பெற்றோர் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். கிருஷ்ணசாமியை போலீசார் கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த், பாலியல் குற்றவாளி கிருஷ்ணசாமிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!