தமிழகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை 6ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று சைவசமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சிக்காக பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகினர். 16 கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி சைவ சமய லீலைகளை கூறினர்.

288views
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை விழாவின முன்னிட்டு 6ம் நாள் விழாவில் சைவ சமய ஸ்தாபித லீலை நடைபெற்றது
இன்று இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் பரங்குன்றீஸ்வரர், அவுடை நாயகி, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சுவாமிகளும் பல்லக்கில் திருஞானசம்பந்தர் 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருளினர்.
அங்கு கோயில் ஒதுவார் முத்து மாணிக்கம் திருஞான சம்பந்தர் பதிகம் பாடி மன்னர் கூன் பாண்டியனின் வெக்கை நோய் தனித்து சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலைக்கான பாடல்கள் பாடப்பட்டது.
– தீபாராதனை முடிந்து சுவாமிகள் வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!