தமிழகம்

திருப்பரங்குன்றம் விளாச்சேரி பகுதியில் தயாராகும் கார்த்திகை விளக்குகள். 5 ருபாய் முதல் 1500 ரூபாய் வரை விளக்குகள் விற்பனைக்கு தயார்.

257views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 6ம் தேதி நடைபெறுவதையொட்டி கார்த்திகை தீபம் தயாரிக்கும் வகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளாச்சேரி பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதால் தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்களுக்கும் விளக்குகள் அலங்கார விளக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அகல்விளக்குகள் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

அகல் விளக்கு, கணபதி விளக்கு’ லட்சுமி விளக்கு’ மகாலட்சுமி விளக்கு. ஐந்து விளக்கு’ சுழல் விளக்கு மற்றும் கோவில்களில் ஏற்றப்படும் மிகப்பெரிய விளக்குகள் தயார் செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கு மலைகளில் ஏற்றப்படும் 100 லிட்டர் நெய் கொள்ளளவு கொண்ட விளக்குகள் தயார் செய்து ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது,

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்புகளால் விற்பனையாகமல் மந்தமான நிலையில் தற்போது விற்பனை நடைபெற்று வருகிறது.

விளக்குகள் தயாரிக்க தேவைப்படும். மண் தட்டுப்பாடு காரணமாக ஒரு ரூபாய்க்கு விற்ற சிறிய அகல் விளக்குகள் ஐந்து ரூபாய்க்கு விற்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் யோசிப்பதாகவும் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!