தமிழகம்

சுந்தரமுடையான் பள்ளியில் வானவில் மன்றம் துவக்கம்

135views
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சுந்தரமுடையான் அரசு உயர்நிலைப்பள்ளியில் வானவில் மன்ற’ தொடக்க விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை மு.மணிமேகலை தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியை முல்லைவாணி முன்னிலை வகித்தார்..மாணவர்கள் பங்கேற்று அறிவியல் ஆய்வுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ஆசிரியர்கள் கனகராஜ், நாகூர், பால முருகன், ஆசிரியை கீதா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். எட்டாம் வகுப்பு மாணவி இதய சாதனா நன்றி கூறினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!