தமிழகம்

வெங்கலகுறிச்சி அரசு பள்ளியில் வானவில் மன்றம் தொடக்கம்

312views
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் வெங்கலக்குறிச்சிஅரசு உயர்நிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு எங்கும் அறிவியல் யாவும் கணிதம் எனும் ஆர்வத்தை தூண்டும் வகையில்
தமிழக அரசு கொண்டு வந்த வானவில் மன்றம் என்னும் புதிய திட்டத்தை தலைமை ஆசிரியர் மு.சேதுராமன் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ்டி.செந்தில்குமார், முதுகுளத்தூர் ஒன்றிய (வெங்கலகுறிச்சி) கவுன்சிலர் ஆர்.கலைச்செல்வி ராஜசேகர் மற்றும் முருகேசன் உள்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!