தமிழகம்

விடுமுறை தினத்தில் தாமாகவே முன்வந்து புதர் மண்டிய கிராம சாலையை சீரமைத்த பள்ளி மாணவர்கள்

265views
விடுமுறை தினமென்றாலே பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம்தான்! தொலைக்காட்சி பார்ப்பதும், கிரிக்கெட் விளையாடுவதும், மொபைலில் கேம்கள் விளையாடுவதும், வயிறுமுட்ட சாப்பிட்டு விட்டு தூங்குவதும் அல்லது ஊர் சுற்ற கிளம்பி அன்றைய பொழுதுகளை வெட்டியாக போக்குவார்கள். ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காகவும் மாணவச் செல்வங்கள் இல்லாமலில்லை!
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் பேரூராட்சியின் உட்கடை கிராமங்களில் ஒன்று சுக்காவழி. இதுநாள் வரை அடிப்படை வசதிகள் கூட கிடைத்திடாமல் தவிக்கும் உழைக்கும் மக்கள் வசிக்கின்ற சிற்றூர் இது. மலை சார்ந்து வாழும் இப்பகுதி மக்கள் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தாலும் எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு கதையாகவே கிடப்பில் போடப்பட்டுவிடுறது. தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே பல மைல்கள் கடந்து நகர் பகுதிகளை அடைய வேண்டிய நிலையில்யில்தான் இன்றளவும் இவ்வூர் மக்கள் உழண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விடுமுறை தினத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த நினைத்த சுக்காவழியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக திகழும் புதர் மண்டிய தமது ஊர் சாலையோரங்களை தாமாக முன்வந்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுபார்த்து மகிழ்வடைந்த ஊர் பெரியவர்களும் மாணவர்களோடு கலந்துகொண்டு சாலையோரங்களை சுத்தம் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, தற்போது அந்த மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!