தமிழகம்

உசிலம்பட்டியில் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.

342views
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் 2180 ஆயுதடைப்படை காலர்கள் 1191 சிறப்பு காவல்படை காவலர்கள் 161 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் 120 தீயணைப்புவீரர்கள் என 3552 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகின்றது.இந்த பணியிடங்களுக்கு 2லட்சத்து 99ஆயிரத்து 887 ஆண்கள் 660811 பெண்கள் 59 திருநங்கைகள் தேர்வு எழுதுகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 700 பேர் காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு எழுதுகின்றனர்.இதற்காக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் 35 தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறப்புக்கண்காணிப்பு குழு துணைக்கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையில் 60க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்வு மையத்திற்குள் பேனா மற்றும் நுழைவுச்சீட்டு மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.மொபைல் போன் பர்ஸ் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டு வெளியிலுள்ள அட்டைபெட்டியில் வைக்கப்பட்டன.தேர்வு எழுதும் அனைவரும் பலத்த பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!