தமிழகம்

விருதுநகர் புத்தகக் கண்காட்சியில், பார்வையில்லாத ஆசிரியை எழுதிய 2 நூல்கள் வெளியீடு

246views
விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில், முதலாவது புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவு, கருத்தரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. புத்தகக் கண்காட்சியில், பார்வையற்ற ஆசிரியை எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் அருகேயுள்ள சூலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரியா. பார்வை இழந்த இவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
மேலும் விருதுநகரில் உள்ள தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். பார்வை குறைபாடு இருந்தாலும் கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம் உள்ள இவர் எழுதுவதையும் தொடர்ந்து செய்து வருகிறார். இவர் எழுதிய ‘சங்க மாந்தரின் அகம்சார் ஆளுமை’, ‘மறம் எனும் மானம்’ ஆகிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா, புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது.
நூல்களை, மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், கதை சொல்லி பவா செல்லத்துரை வெளியிட்டனர். செந்திக்குமார நாடார் கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன், பேராசிரியர் சாமி ஆகியோர் நூல்களை பெற்றுக் கொண்டனர். எழுத்தாளர் அருண்பிரியாவிற்கு, சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!