தமிழகம்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்; பள்ளி மாணவிகள் பங்கேற்பு

125views
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் முன்னீர் பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவிகள் வரலாற்று சிறப்புமிக்க நெல்லை அரசு அருங்காட்சியக வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது பள்ளி மாணவிகளிடம் அருங்காட்சியகம் குறித்தும், இங்கு உள்ள அரும்பொருள்கள் பற்றியும், பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பதின் அவசியம் பற்றியும் அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி விரிவாக எடுத்துரைத்தார். இந்த நாட்டு நலப்பணி திட்டத்தில் முன்னீர் பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை மரிய செல்வி, திட்ட அலுவலர் சார்லஸ் நீல், உதவி திட்ட அலுவலர் ஞானசெல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : அபுபக்கர்சித்திக், தென்காசி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!