தமிழகம்

கொல்கத்தாவில் தேசிய கலை இலக்கிய விழா: கீழக்கரை சையத் ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர் தேர்வு

225views
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் சாகித்யோத்ஸவ் எனும் தேசிய அளவிலான கலை இலக்கிய விழாவில் பங்கேற்க கீழக்கரை சையத் ஹமீதா அரபிக் கல்லூரி மாணவர் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டிச. 2, 3, 4 ஆகிய தேதிகளில் இவ்விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்படும் மாணவர்கள் அடுத்த வாரம் நடைபெறும் ஆசியாவின் இஸ்லாமிய இலக்கிய விழாவில் மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளனர். மாணவர்கள் முஹமது வாஸில் ஆங்கில வினாடி வினா, முஹமது ஹவுரான் ஆங்கில பேச்சு, ஆங்கில வார்த்தை விளையாட்டு, உருது பேச்சு, ஆங்கில கை எழுத்துக்கு ஷபீக் ரஹ்மான் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
கடந்த மாதம் நடந்த மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்களின் தனித்திறனை வெளிப்படுத்தி தேசிய விழாவிற்கு தகுதி பெற்றனர்.  சாகித்யோத்ஸவ் என்பது சுன்னத் ஜமாத், மாணவர் கூட்டமைப்பு என்ற மாணவர் அமைப்பால் ஏற்பாடு செய்த கலை இலக்கிய விழா ஆகும். இந்த விழா கடந்த 25 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்விழாவில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!