தமிழகம்

உலக மரபு வார விழா தொல்லியல் கருத்தரங்கு

104views
தொல்லியல் பற்றி அடுத்த தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தமிழக அரசு தொல்லியல் துறை, ராமநாதபுரம் சிஎஸ்ஐ. கல்வியியல் கல்லூரி இணைந்து தொல்லியல் கருத்தரங்கு நடத்தியது.

கல்லூரி தாளாளர் தேவ.மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆனந்த் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட தொன்மை பாதுகாப்பு மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் மாவட்டத்தில் புதியதாக கண்டறியப்பட்ட நாணயங்கள், கல்வெட்டுகள், தொல்லியல் இடங்கள், இயற்கை தாவரங்கள் குறித்தும், ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் அலுவலர் ம.சுரேஷ், கீழடி, மயிலாடும்பாறை, கொற்கை, சிவகளை போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய தொல்லியல் அகழாய்வுகள் பற்றியும், கல்லூரி முதலாமாண்டு மாணவி வே.சிவரஞ்சனி நடுகற்கள், மலைக்குகைகள், முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகளில் காணப்படும் சங்க கால தமிழ் எழுத்து பொறிப்புகள் பற்றியும் விளக்கினர்.  உதவி பேராசிரியர் பெ.கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!