தமிழகம்

சிவகாசியில் பிரசித்திபெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில், பரிகார பூஜைகள்

120views
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்குச் சொந்தமான, பிரசித்திபெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேகம் செய்வதற்கான புனரமைப்பு பணிகள், கோபுரத்தில் வர்ணம் தீட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிறு கிழமையன்று, கோவில் முன்பு பட்டாசுகள் வெடித்த போது, கோபுரப் பணிக்காக மூடப்பட்டிருந்த துணியில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. நல் வாய்ப்பாக பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, கோவில் நிர்வாகம் மற்றும் தேவஸ்தான நிர்வாகிகள் ஒன்றுகூடி கோவிலில் பரிகார பூஜைகள் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை, கோவில் வளாகத்தில் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் நகரின் முக்கிய பிரமுகர்கள், கோவில் தேவஸ்தான நிர்வாகிகள், நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீபத்திரகாளியம்மன் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!