தமிழகம்

சாத்தூர் அருகே, சைக்கிள் கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

235views
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (50). இவர் ஏழாயிரம்பண்ணை – சாத்தூர் சாலையில், சைக்கிள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து வியாபாரம் பார்த்து வருகிறார். வழக்கம் போல வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்குச் சென்ற குருசாமி, இன்று கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். கடையின் மேஜையில் வைத்திருந்த 11 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனது தெரிந்தது. இது குறித்து குருசாமி, ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!