தமிழகம்

கப்பலூர் டோல்கேட்டை அகற்றுவோம் என்று ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதி கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது திருமங்கலத்தில் 22 ஆம் தேதி நடைபெறும் முழு கடைப்பு போராட்டத்திற்கு அ.இ.அதிமுக முழு ஆதரவு. கப்பலூர் டோல்கேட்டை அகற்றும் வரை அதிமுக கடைசி வரை போராடும். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமார் உறுதி

343views
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்பட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி,முன்னாள் முதலமைச்சர்எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு ஜூலை 4ம் தேதி அங்கே கருத்து கேட்டு கூட்டமும் அறப்போராட்டம் நடத்துவதற்கு, அங்கே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே சாலையிலே அமர்ந்து அந்த உண்ணாவிரதம் போராட்டத்தை மேற்கொள்கிற போது என் மீதும் கழகத் தொண்டர்கள் மீதும் திமுக அரசு பொய் வழக்கு தொடுக்கப்பட்டது.
திருமங்கலம் சுங்கச்சாவடி அகற்றப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கிற போது அமைச்சர் எ.வ.வேலு சென்னைக்கு தான் முக்கியத்துவம் என்கிற வகையில் தான் அவருடைய பதிலும் அமைந்திருந்தது.
நான் அமைச்சராக இருந்த பொழுது அந்த சுங்கசாவடியை அகற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து எடப்பாடியார் மூலமாக தொடர்ந்து வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல், அப்போது கப்பலூர் பயன்படுத்தப்படும் உள்ளுர் வாகன உரிமையாளர்களுக்கு விலக்கு பெற்றுத் தந்தது .இந்த நேரத்திலே நான் நினைவு கூற கடமைப்பட்டு இருக்கின்றேன்
தற்போது வாகன உரிமையாளர்களுக்கு வழக்கறிஞர்கள் சார்பிலே சுங்கச்சாவடியை பயன்படுத்தியதற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது எத்தனை முறை நீங்கள் பயன்படுத்திக் கொண்டீர்கள் என்று சுட்டிக் கட்டப்பட்டுள்ளது குழப்பமான சூழ்நிலையை ஏற்கனவே சுங்கச்சாவடி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிற வேளையிலே, தற்போது இந்த வழக்கறிஞர்கள் நோட்டீஸ் மூலம் குறிப்பிட்ட காலத்துக்கு நீங்கள் தொகை செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது இதனால் மக்களுக்கு வேதனை மன உளைச்சலையும் அளித்திருக்கிறது.
கப்பலூர் டோல்கோட்டை அகற்ற போராடினால் இன்றைய முதலமைச்சர் எங்களை காழ்புணர்யோடு கைது செய்யப்பட்டு, இன்றைக்கு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதை சர்வாதிகார போக்குடன் தடுக்க நினைக்கிற இந்த அரசு, இந்த சுங்கச்சாவடி அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நாடு முழுவதும் 565 சுங்கச்சாவடிகளில், தமிழகத்தில் அமைந்துள்ள 48 சுங்கச்சாவடிகளிலே 27 சுங்க சாவடிகளுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் 1அன்றும், 21 சுங்கசாவடிகளுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது இதில் கப்பலூர் டோல்கேட்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
60 கிலோ மீட்டர் இடைவெளியில் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி அறிவித்தார்கள்
அதன்படி கொடைரோட்டில் உள்ள சுங்கச்சாவடி, சிட்டம்பட்டி சுங்கச்சாவடி, அருப்புக்கோட்டை ரோடு சுங்கச்சாவடி ஆகியவை திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடிக்கு 60 கிலோ மீட்டருக்குள் உள்ளது
564 சுங்கசாவடிகள் நகர்ப்பகுதிக்கு வெளியே தான அமைக்கப்பட்டிருக்கிற ஆனால் கப்பலூர் டோல்கேட் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது இதனால் உள்ளூர் மக்கள், வியாபாரிகள் கடுமையான தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவமரியாதையோடு நடத்தப்படுகிற அந்த நிலை என்று கண்ணீர் வடிப்பது கவலையோடு இந்த வியாபாரிகள் பொதுமக்கள் வாகன ஓட்டிகள், அதேபோன்று டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுகிறார் கைது செய்து வழக்கு பதிவு செய்கிற ஒரு சர்வாதிகார போக்கு இருக்கிறது .
நாளைய தினம் 22ம் தேதி திருமங்கலத்தில் அனைத்து வணிகர்கள் சங்கம், டூரிஸ்ட் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம், அனைத்து சங்கங்களும் போராடுவதற்கு தயாராக இருக்கிறார்கள்.
டி.கல்லுப்பட்டி, பேரையூர் ராஜபாளையம் ,தென்காசி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் மதுரை, விருதுநகர் நான்கு வழியில் சாலை 4கிலோமீட்டர் தூரம் தான் பயன்படுத்துகின்றன அதில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் 2 கிலோ மீட்டர் தூரத்தில் திருமங்கலம் நகருக்குள் வந்து ராஜபாளையம் ரோட்டிலே செல்கின்றனர் .இதை பயன்படுத்துவதற்கு சுங்க கட்டணம் முழுமையான கொடுமை வேறு எந்த சுங்கச்சாவடிகளும் இல்லை.  திருமங்கலம் சுங்கச்சாவடியில் தான் தொடர்ந்து இந்த கொடுமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கப்பலூர் டோல்கேட் 2021 முதல் 2022 வரையில் பலமுறை கட்டணம் செலுத்தாமல் கடந்து சென்றுள்ளது லட்சக்கணக்கில் பணத்தை நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கிறது வழக்கறிஞர் சார்பில் நோட்டிஸ் கொடுக்கப்பட்டு வாகன நம்பருடன் தனித்தனியாக அனுப்பப்பட்டிருக்கிறது .
இது வேதனையிலும் வேதனையாக இருக்கிறது.  இந்த கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று அன்றைக்கு எதிர் கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதி எப்படி 505 வாக்குறுதிகள் காற்றிலே பறக்க விடப்பட்டதோ அதேபோன்று இந்த வாக்குறுதியும் பறக்கவிட்டார்.
இந்த கொடுத்த வாக்குறுதியும், திருமங்கலம் தொகுதிக்கு மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களுடைய நுழைவு பகுதியாக இருக்கிற திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவதற்கு அன்றைக்கு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது கிணற்றிலே போட்ட கல்லாக இன்றைக்கு காட்சி காட்சியளிப்பது வேதனையில் உச்சமாகவே உள்ளது.
நாளைய தினம் நம்முடைய தோழர்கள் களத்தில் இறங்கி வீதியிலே வந்து போராடினால் தான் இந்த அரசினுடைய கவனத்தை ஈர்க்க முடியும் என்ற ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.  ஆகவே கோரிக்கை நியாயமான கோரிக்கை ,இந்த அரசு இன்றைக்கு காதிலே வாங்கிக் கொள்ளாமல் எந்தவிதமான முயற்சி எடுக்காமல் வேதனையாக இருக்கிறது.
நாளைய தினம் 22ம்தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அதற்கு முழு ஆதரவு தெரிவித்து, ஏற்கனவே கொடுத்திருக்கிற ஆதரவை உறுதி செய்து இந்த போராட்டம் வெல்லட்டும்.
கப்பலூர் சுங்கச்சாவடி அகற்றுகிற வரை, அதை ரத்து செய்கிற வரை, அதை மூடுகிற வரை எடப்பாடியார் ஆலோசனை பெற்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களை திரட்டி, அதேபோல மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்று கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!