தமிழகம்

மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவையான மயில்

230views
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கிரிவலப் பாதையில் ஈகோ பார்க் எதிரே தேசிய பறவையான மயில் ஒன்று இறந்து கிடப்பதாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பரங்குன்றம் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து பின் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மதுரை வனத்துறையினர் இறந்த கிடந்த மயிலை பிரேத பரிசோதனைக்காக மதுரை வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். மயிலானது விபத்தில் இறந்ததா அல்லது நாய்கள் ஏதேனும் கடித்துள்ளதா?  மர்ம நபர்கள் விஷம் வைத்துள்ளார்களா என பிரேத பரிசோதனைகள் வந்த பிறகு மயிலின் இறப்புக்கு காரணம் தெரியவரும் என வன அலுவலர்கள் தெரிவித்தனர்.
தேசிய பறவை மயில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!