தமிழகம்

சோழவந்தானில் பாஜக சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

322views
மதுரை கிழக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு மண்டல் பாஜக சார்பாக பால் விலை உயர்வை கண்டித்து சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல் தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் ஹரிகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். மண்டல் பார்வையாளர் ஜெயபாண்டி, முருகன், கதிர்வேல், முத்தையா, மாவட்ட செயலாளர் முருகேஸ்வரி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் விஜயகுமார், பெத்தன பாண்டியன், முத்துப்பாண்டி, தேவி, ரேவதி,சீதாபாலகிருஷ்ணன், விக்னேஷ், கருப்புசாமி ,ரமேஷ், ராஜாராமன், மீன் கடை முருகேசன், தசரதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பால் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!