தமிழகம்

சோழவந்தான் எம் வி எம் கலைவாணி பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது

160views
மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில் உள்ள எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மாறுவேட போட்டி நடைபெற்றது.
குழந்தைகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு மாறுவேட போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை எம் வி எம் கலைவாணி பள்ளி தாளாளர் எம் மருது பாண்டியன் எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா நிர்வாகி வள்ளிமயில் முதல்வர் ஆகியோர் வழங்கினார்கள். இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் பள்ளியின் முதல்வர் தீபா ராகினி ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும்.மாணவ மாணவியர் அவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: வி காளமேகம் மதுரை மாவட்டம்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!