தமிழகம்

திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் துணை மேயர்,மண்டல தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

226views
நிதி நிலை சீராகும் வரை சாக்கடை, குடிநீர், சாலை பணிகளுக்கு மாமன்ற உறுப்பினர்களில் கோரிக்கையை செயல்படுத்தி தர- துணை மேயர் நாகராஜன்
திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் மாமன்ற உறுப்பினர்கள் கட்டம் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன். மண்டல தலைவர் சுவிதா விமல், மாநகராட்சி உதவி ஆணையர் சையது முஸ்தபா கமால் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரை மாநகராட்சி அனைத்து பிரிவு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது பகுதி மக்களின் குறைகளை அதிகாரிகளுக்கும்., மண்டல குழு தலைவருக்கும்., துணைமேயருக்கும் எடுத்துரைத்தனர்.

கடந்த ஆறு மாத காலமாக மக்கள் பிரச்சனைகள் எதுவும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என்றும்., குடிநீர் வசதி., கழிவுநீர் செல்வதற்கு சாக்கடை வசதி., தெருவிளக்கு வசதி என எந்த வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை., வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மழைக்காலங்களில் நீர் பிடிப்பு பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பல்வேறு காய்ச்சலுக்கு உள்ளாகின்றனர் அதற்காக சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து 94-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்யன் மண்டல குழு கூட்டத்தில் பேசும் போது.,மண்டல குழு கூட்டத்தில் மக்கள் குறைகளை கூட்டத்தின் வாயிலாக நாங்கள் கூறியதற்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. கூட்டம் எதற்காக என்று எனக்குப் புரியவில்லை.

எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப் போவதில்லை. பலரும் தீர்வுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பதில் கிடைக்காத தீர்மானத்திற்கு எதற்காக கூட்டம் முதல் முதலில் கொண்டு வந்து தீர்மானமே இன்னும் நிறைவேற்றப்படவில்லை.  மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள பிரச்சனை என்பதை வார்டு உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் தெரியப்படுத்துங்கள்.
நீங்கள் சொன்னால் தான் நாங்கள் புரிந்து கொள்ள முடியும் தொடர்ந்து மௌனம் காப்பது ஏன் நிர்வாகத்தில் என்ன பிரச்சனை மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் இருப்பது ஏன்.?
ஃபண்ட் இருக்கு வேலை நடக்கவில்லை என்றால் உங்களிடம் நான் கேள்வி கேட்கலாம்., நிதி இல்லை என்று கூறிவிட்டீர்கள் வேலை என்ன என்பதை எழுதிக் கொடுங்கள் என கேட்கிறீர்கள் அதற்கு அவசியம் இல்லை.

நிதி இல்லாமலே பல்வேறு வேலைகளை வார்டு உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் செய்யலாம் ஆனால் அதையும் செய்யாமல் இருக்கிறீர்கள். தண்ணீர் பிரச்சனை சரி செய்யலாம் சுகாதார சீர்கேட்டை சரி செய்யலாம் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் சரி செய்யலாம் அதையும் கூட மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்.? இதைப் பற்றி மண்டல குழு கூட்டத்தில் பேசினால் அடுத்து நடைபெற உள்ள கூட்டத் பரபரப்பாக காணப்படுகிறது. அதிகாரிகள் அதை சரி செய்கிறோம் இதை சரி செய்கிறோம் என கூறுகிறார்கள் தவிர வேலை ஒன்றும் நடக்கவில்லை.
தீர்மானங்களுக்கு முன்னுரிமைக்கு ஏற்ப்போல் செய்து தரப்படும் என நீங்கள் கூறுகிறீர்கள் நாங்கள் யாரும் கொடுத்த தீர்மானங்களில் எதுவும் முன்னுரிமை இல்லையா என தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.? பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு மண் பரிசோதனை செய்தார்கள் அந்த பரிசோதனை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து தகவலை இந்த கூட்டத்தில் நீங்கள் தெரிவிக்கலாம்.? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

கவுன்சிலர் விஜயா கூறுகையில், ஹார்விப்பட்டி பகுதியில் தொடர்ந்து தெருவிளக்கு இல்லாததால் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனையாளர்கள் மது விற்பனையாளர்கள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதி அருகே நின்று கொண்டு அச்சுறுத்தும் வகையிலும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகமாகியுள்ளது. அவற்றை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்றும் பலமுறை காவல்துறையினர் உதவியுடன் சரி செய்யப்பட்டு வருகிறது. தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் உடனடியாக தெருவிளக்கு அமைக்க வேண்டும் என்றும் வார்டு உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.
துணை மேயர் நாகராஜன் கூறும்போது. கடந்த 10 ஆண்டுகளில் மாநகராட்சி பணிகள் நடைபெறவில்லை. தற்போது சிறு குழந்தைபோல் தத்திதத்தி நடக்கும் நிலையில் உள்ளது. நிதி வந்தவுடன் பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளுக்கும் வழங்கி பணிகளை தொடரப்படும்.  தற்போதுளள் சூழ்நிலையில் சாக்கடை குடிநீர், சேதமடைந்த சாலையை தற்காலிக சீரமைப்பு வேலை பார்க்க அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!