தமிழகம்

மதுரையில் ரயில்வே கிராசிங் கேட் அடைத்த பின்னர் தண்டாவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்க தக்க இளைஞர் ரயில் மோதி பலி

416views
திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டு வரையில் செல்ல கூடிய விரைவு ரயில் இன்று மாலை மதுரை ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலானது அழகப்பா நகர் ரயில்வே கிராசிங் அருகே வந்து கொண்டிருந்த போது அப்போது ரயில்வே கேட் அடைக்கபட்ட பின்னர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்கதக்க நபர் ரயிலில் மோதி சம்பவ இடத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இதனை அடுத்து ரயில் ஓட்டுநர் சம்பவம் குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளைஞர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து மதுரை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!