தமிழகம்

ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகள் பட்டறிவு பயணம்

113views
திருப்புல்லாணி வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2022 -2023 திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய விவசாயிகள் பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது.
திருப்புல்லாணி வட்டாரத்தில் இருந்து களரி, லாந்தை உத்திரகோசமங்கை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்பட்டறிவு பயணத்தில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். தெற்கு தரவை கிராமத்தில் வேளாண்மை பயிர்களுடன், தோட்டக்கலை பயிர் மற்றும் ஆடு, மாடு, கோழி மற்றும் புறா வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு ஆகிய தொழில்நுட்பங்களை மேற்கொள்ளும் விவசாயி பாலு அவர்களின் பண்ணையை விவசாயிகள் பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்.
தீவன சோளம் பயிரிடும் முறைகள் மற்றும் ஆடு, மாடு ஆகியவற்றிக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் குடல்புழு நீக்கம் செய்தல், சத்தான உணவு அளிக்கும் முறைகள் தொடர்பாக விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அடர் நடவு முறையில் மா, முருங்கை பயிரிடும் முறைகளையும் விவசாயிகள் பார்வையிட்டனர்.
இப்பட்டறிவு பயணத்தை திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர் அமர்லால் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். திருப்புல்லாணி வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரெங்கநாதன், உதவி தொழில்நுட்ப மேலாளர் சேகர் ஆகியோர் இப்பட்டறிவு பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நிருபர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!