The Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman addressing a Press Conference, in New Delhi on June 28, 2021.
இந்தியா

2024 ஆம் வருடத்திற்குள். “இந்தியாவின் சாதனை நினைத்து பெருமைப்படுகிறோம்”.? நிர்மலா சீதாராமன் பேச்சு

124views
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த 5g சேவை குறித்து மத்திய நிதி மந்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் பிரதமர் மோடி குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே 5g சேவையை தொடங்கி வைத்திருக்கின்றார். 2024 ஆம் வருடத்திற்குள் நாடு முழுவதும் 5g சேவை வந்துவிடும் 5g சேவை இன்னும் பொதுமக்களை சென்றடையவில்லை.
இந்த நிலையில் இந்தியாவில் தொடங்கப்பட்ட 5g சேவை முற்றிலும் தனித்துவம் வாய்ந்தது. இந்த 5g சேவைக்காக சில பாகங்கள் தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் எந்த நபரிடம் இருந்தும் வரவில்லை அதனால் 5g தொழில்நுட்பம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது அல்ல எங்களது சொந்த தயாரிப்பு. அதிலும் முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதாகும். வேறு நாடுகள் விருப்பப்பட்டால் அவற்றுடன் 5g சேவையை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கின்றோம். ஆனால் 5ஜி விஷயத்தில் இந்தியாவின் சாதனையை நினைத்து பெருமைப்படுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!