இந்தியா

ஓணம் பண்டிகையை ஒட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை.. – கேரள அரசு அறிவிப்பு

182views
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நட்சத்திர நாளில் மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய நாட்டையும், நாட்டு மக்களையும் பார்ப்பதற்காக வருவார் என்பது ஐதீகம். அவரை வரவேற்கும் விதமாகவே கேரளாவில் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. சாதி, மத பேதமின்றி கேரள மாநிலத்தில் உள்ளது அனைத்தும் மலையாள மொழி பேசிடும் மக்களாலும் ஒன்றாக ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பத்து நாட்களும் திருவிழா போல கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவர். வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் கூட விடுமுறை எடுத்து இந்த நாட்களில் சொந்தங்களுடன் இணைந்து இந்த பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
அந்தவகையில் நடப்பாண்டு ஓணம் பண்டிகையை ஒட்டி கல்வி நிறுவனங்களுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், ” ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி நடைபெறும் தேர்வுகள் முன்னதாகவே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுகள் வருகிற 24-ந்தேதி தொடங்கப்படுகிறது. முன்னதாக மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில், இன்று (20.08.22) பள்ளி, கல்லூரிகள் இயங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!