விளையாட்டு

டி20 கிரிக்கெட்டில் டுவைன் பிராவோ புதிய சாதனை

89views
கிரிக்கெட்டில் இதுவரை எந்தவொரு வீரரும் செய்திராத பிரமாண்ட சாதனையை டுவைன் பிராவோ படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருபவர் டுவைன் பிராவோ.
தமிழக அரசின் செம பிளான் டுவைன் பிராவோ இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பிராவோ பிரமாண்ட சாதனையை படைத்ததை அடுத்தடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இங்கிலாந்தின் the hundred தொடரில் விளையாடி வரும் பிராவோ டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்களை வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
நார்தன் ஜார்ஜர்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ, ஓவல் இன்விசிபல் அணி வீரர்களான ரிலே ரோசோவ் மற்றும் சாம் கரனின் விக்கெட்களை வீழ்த்தியன் மூலம் இந்த சாதனையை படைத்தார். அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் பிராவோவுக்கு அடுத்தபடியாக ரஷித் கான் 466 விக்கெட்களுடன் உள்ளார். 3வது இடத்தில் சுனில் நரேன் 460 விக்கெட்களுடன் உள்ளார்.
டி20 கிரிக்கெட் பயணம் டுவைன் பிராவோ இதுவரை டி20 கிரிக்கெட்டில் 22 அணிகளுக்காக விளையாடியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 91 போட்டிகளில் 78 விக்கெட்களை எடுத்துள்ளார். மீதமுள்ள 522 விக்கெட்கள் உள்நாட்டு தொடர்களில் எடுத்தவை ஆகும். இதில் அதிகபடியாக சிஎஸ்கே அணிக்காக 154 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அறிமுகமான டுவைன் பிராவோ, 2014ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இடம்பெறவில்லை. இதன்பின்னர் 8 வருடங்களாக முழுக்க முழுக்க டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி, 2021ல் டி20 கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றார். எனினும் உள்நாட்டு டி20 தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!