விளையாட்டு

மாவட்ட அளவில் மாபெரும் திறந்த வெளி சிலம்ப போட்டி 2022

382views

தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகம் மற்றும் சென்னை மாவட்ட தமுமுக சிலம்பம் விளையாட்டு அணியின் சார்பாக சிலம்பம் விளையாட்டுக்கு அங்கீகாரம் வழங்கி 3%  இட  ஒதுக்கீடு அளித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக “மாவட்ட அளவில் மாபெரும் திறந்த வெளி சிலம்ப போட்டி 2022” கடந்த ஜூலை 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில உள்ள சுஃபா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியின் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விளையாட்டு போட்டியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அ. ஆதர்ஷ் முதல் பரிசு பெற்றான்.

தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழக சென்னை மாவட்ட தலைவர் ஆனான் N கலில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்.

இந்த விளையாட்டு போட்டியில் மாவட்ட அளவில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!