“பஞ்சாப்பில் சீக்கியர்களை சிறுபான்மையினராகக் கருதினால் அது நீதியின் கேலிக்கூத்து!”- உச்ச நீதிமன்றம்
பாஜக நிர்வாகியாக இருந்த நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இந்தியாவுக்கு வெளிநாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து பாஜகவிலிருந்து நுபுர் ஷர்மா நீக்கப்பட்டார்.
அதேநேரத்தில், நுபுர் ஷர்மா மீது பல்வேறு மாநிலங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனினும் அவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்புக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையியில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நுபுர் ஷர்மாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நுபுர் ஷர்மாவுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய அரசு, டெல்லி காவல்துறை, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகம், ஜம்மு-காஷ்மீர், அசாம் மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் அந்த வழக்குகளில் கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.