உலகம்உலகம்

இலங்கையில் இன்று முதல் அவசரநிலை சட்டம் அமல்- தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அதிரடி

94views

இலங்கையில் இன்று முதல் நாடு தழுவிய அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாகப் பிறப்பித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி பதவியை கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்துவிட்டு சிங்கப்பூருக்கு தப்பி ஓடிவிட்டார். சிங்கப்பூரில் பதுங்கி இருக்கும் கோத்தபாய ராஜபக்சே, சவுதி அரேபியாவில் அகதியாக தஞ்சம் அடையக் கூடும் என கூறப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்சே, ராஜினாமா செய்ததால் இலங்கையின் தற்காலிக ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நாளை மறுநாள் ஜூலை 20-ந் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இலங்கை முழுவதும் அவசரநிலை சட்டத்தை அமல்படுத்தி தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக சிறப்பு கெஜட் அறிவிப்பையும் ரணில் விக்கிரமசிங்கே வெளியிட்டுள்ளார்.

அதில், அரசியலமைப்பின் 40(1) (இ) பிரிவு மற்றும் ஏனைய இது தொடர்பான சட்டங்களின் அடிப்படையில், பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன; மேலும் இலங்கை நாடாளுமன்றத்துக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!