நிகழ்வு

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் நடத்திய உலகத் தாய்மொழி நாள் விழா

1.57Kviews
உலகத் தாய்மொழி நாள் விழாவை தமிழ்த் தன்னுரிமை இயக்கம் ‘தமிழ்ப் புலவர்கள் நாளாக’ எடுத்து சென்னையில் கொண்டாடியது.
உலக நாடுகளின் அவையாக இருக்கும் ஐக்கிய நாடுகள் அவை ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21 ம் நாளை உலக மக்களின் தாய்மொழி நாளாக கடைபிடிக்க அறிவித்துள்ளதின் அடிப்படையில் தமிழ்த் தன்னுரிமை இயக்கம் சென்னை அரும்பாக்கத்தில் இருக்கும் நேசனல் ஸ்டார் பள்ளியில் நேற்று பேராசிரியர் கா வெ இராசகணேசு தமிழ்தாய் வாழ்த்தினை பாட, அதன் தலைவர் பாவலர் மு இராமச்சந்திரன் தலைமையில் தொடங்கியது. இறையறிஞர் ஆரிப்மாறவர்மன், முகப்பேறு சுபராசன், கவிச்சுடர் சிந்தை வாசன், கவிஞர் மதியரசு, முன்னிலையில் அதன் கொள்கை பரப்புச் செயலாளர் அயனாவரம் இரா பாபு வரவேற்புரை யாற்றினார்.
இதில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் மேனாள் தமிழ்த்துறை தலைவரும் சிறந்த தமிழ்மொழி பற்றாளரும் அறிஞருமான பேராசிரியர் ஆறு அழகப்பன் அவர்களு க்கு‌ பாராட்டு நடைபெற்றது.. அதில் மாலை அணிவிப்பை தேசியவாத காங்கிரஸ் தமிழ் மாநில தலைவர் பி கே நரேசுகுமார் அவர்கள் செய்து சிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ் நாள் காட்டியையும் பொங்கல் மலரையும் வெளியிட்டு தேசியவாத காங்கிரஸ் தேசிய செயலாளர் கோ பா சாரதி வாழ்த்துரை வழங்க.. பேராசிரியர் ஆறு அழகப்பன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் மகளிரணி செயலாளர் தேவிமுருகள் தலைமையில் கவிஞர் சுமித்ரா கோவிந்தசாமி, தண்ணீர்குளம் தாசன், கவிஞர் வீரமுத்து, கவிஞர் இனியா, பேராசிரியை மு சாந்தி, தாய்மொழி நாளை வாழ்த்தி கவிதை வழங்கினர்.
தாய்மொழி நாள் சிறப்பினை வலியுறுத்தி, வாழ்த்தி.. தமிழ்நாடு சோசலிச்டு கட்சியின் தலைவர் தஞ்சை இளஞ்சிஙகம், தேசிய ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் வழ. த தனசேகர், தமிழக மக்கள் முற்போக்கு கட்சித் தலைவர் வழக்கறிஞர் த சக்திவேல், ஆர் எம் எசு தொழிற்சங்கத் தலைவர் சிட்டிபாபுராசு, உலகத் தமிழின பேரியக்கம். தலைவர் கரு சந்திரசேகரன், ஆவடி மு முரளி, மதுரை ஆ மீ தமிழ்மகன், விவசாயி செயராமன் என பேச.. தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் தலைவர் பி கே நரேசுகுமார் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில்,
*தமிழை தமிழ்நாட்டில் பாடமொழியாகவும் பயிற்று மொழியாகவும் எல்லா பாடங்களும் தமிழில் மட்டுமே நடத்த வேண்டும்
*தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை தமிழ்நாட்டு அரசு முழுமை படுத்தி நிறை வேற் வேண்டும்.
*எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற நிலை மாறி, இன்று எங்கும் பிறமொழிகள். எதிலும் அயல் மொழி.. என இருப்பதை மாற்றி தமிழில் விளம்பர பலகை முதற்கொண்டு வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*மைய அரசு தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கி, அதன் உலக அளவிலான மதிப்பை காப்பாற்ற வேண்டும்.
*திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக ஏற்று உடனடியாக அறிவிக்க வேண்டும்.. என்பன முமொழியப்பட்டன.
இவையே.. தாய்மொழி நாளின் பயனாக அமையும். அதனை மதித்து தாய்மொழி நாளை கொண்டாட வைத்துள்ள ஐக்கிய நாடுகள் அவைக்கு நமது இந்திய அரசும் மாநில தமிழக அரசும் செய்யும் கடமையாகும் என பாவலரும் மற்ற தலைவர்களும் ஏற்று பேசினார்.
விழா நிறைவாக தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் பண்பாட்டு அணி செயலாளர் வடிவேல் ஓதுவார் நன்றியுரையாற்ற இனிதே நிறைவடைந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!