பாக். பிரதமர் இம்ரான் கான் நாளை (பிப்.,23) ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.பாக்.
வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது: பாக். பிரதமர் இம்ரான் கான் ரஷ்யாவின் அழைப்பை ஏற்று 23, 24 தேதிகளில் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க இருக்கும் பிரதமர் இம்ரான் கான் இருதரப்பு நலன் சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளார், என்றார்.கடந்த 23 ஆண்டுகளில் ரஷ்யாவுக்கு பயணிக்கும் முதல் பாக். பிரதமர் என்ற பெருமையை இம்ரான் பெற உள்ளார். 1999ல் அப்போதைய பிரதமர் நவாஸ் ரஷ்யா சென்றது குறிப்பிடத்தக்கது.




