சினிமா

25 வருடங்கள் கழித்து கமலின் கதையில் அப்பாவும் மகனும்.. விக்ரம் போட்ட தப்பு கணக்கு

76views

விக்ரம்,துருவ் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள படம் தான் மகான். முதலில் இப்படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கில் வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் தற்போது அமேசான் தளத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளனர்.

இப்படத்தில் விக்ரம் வில்லனாக நடித்துள்ளதாக தகவல் வெளியானது. இதுவரை எந்த ஒரு நடிகருக்கும் விக்ரம் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது கிடையாது. ஆனால் தன் மகனுக்காக வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

மகான் படத்தின் கதை தற்போது இணையத்தில் லீக்காகி உள்ளது. அதாவது தனிமனித சுதந்திரத்தை போராடும் ஒரு மனிதனின் வாழ்க்கையை தான் மிக சுவாரசியமாக எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விக்ரம் தனது தனிமனித சுதந்திரத்திற்காக போராடுகிறார். அதனால் இவருக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் வரத் தொடங்குகிறது.

இருந்தாலும் தனது சுதந்திரத்திற்காக போராடி வருகிறார். ஒரு கட்டத்திற்கு பிறகு இவரது குடும்பம் இவரை விட்டுப் பிரிய காரணமாகிறது. இதனால் தன் மகனின் பாசத்தை இழக்கிறார். மேலும் தன் மகனுடன் வெறுப்பையும் சம்பாதிக்கிறார். இதனால் துருவ் விக்ரம் அப்பாவும் மீது கோபம் கொள்கிறார் என்பது போல் படத்தின் கதையை அமைத்துள்ளனர்.

மேலும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களையும் விக்ரம் எவ்வாறு அதனை சமாளிக்கிறான் பின்பு வாழ்க்கையில் எப்படி சாதிக்கிறார் என்பது போன்ற கதைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் இது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இக்கதை பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை 25 வருடங்களுக்கு முன்னர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து மெகா ஹிட்டான இந்தியன் பட சாயலில் உள்ளது. விக்ரம் இதுவரை இந்த மாதிரியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை அதனால் கண்டிப்பாக இப்படம் விக்ரமிற்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுக்கும் மேலும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் ரசிகர்களால் கொண்டாடப்படும் என படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!