132views
போலந்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 80 ஆயிரத்தைக் கடந்தது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 403 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 80,399-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 23,242 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 33,03,046-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.




