சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 43

174views
வெளியூர் சென்று வீடு திரும்பிய செழியனிடம் வந்ததும், வராததுமாய் எதற்கு “அந்த கார்குழலி இங்கு வருகிறாள். ஏன் எங்களை அவமானப்படுத்த வா???”
என்று கேள்வி கேட்ட லட்சுமிக்கு… ஒன்றும் புரியாதவனாய் நின்றான்.
“அம்மா என்ன ஆயிற்று. எதற்காக அவள் இங்கு வந்தாள். அதெல்லாம் நீயே அவளிடம் கேட்டு தெரிந்து கொள்.இன்னொரு முறை அவள் இங்கு வந்தாள் என்றால் என் மறு உருவத்தை நீ பார்க்க நேரிடும்.
இதுவே முதலும், கடைசியுமாக இருக்கட்டும்” என்று எச்சரிக்கை விடுகிறாள்.
சிறிது நேரம் ஓய்வெடுத்த செழியன் அடுத்த நிமிடமே கார்குழலி என் வீட்டுக்கு சென்று எதற்காக நீ அங்கே சென்றாய். உன்னால் எனக்கு எவ்வளவு இன்னல்கள் தெரியுமா!…..
உடனே குழந்தையை தூக்கிவந்து காண்பிக்கிறாள்.
“நீங்கள் இத்தனை நாட்களாக வரவில்லை. உங்களை காணாமல் ஏக்கத்தில் உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை அதனாலேயே தான் அங்கே வந்தேன்.”
குழந்தையைப் பார்த்ததும் அடுத்த வார்த்தை பேசாமல் மௌனமாகி போனான்.
குழந்தையுடன் அமர்ந்திருந்த செழியனுக்கு “நான் உணவு தயாரித்து எடுத்து வருகிறேன். நீங்கள் கொஞ்ச நேரம் குழந்தையுடன் இருங்கள்” என்று சொல்லி விட்டு சமைக்க செல்கிறாள்.
சமையலறையில் இருந்த கார்குழலி யின் தாய் “கொஞ்ச நாள் அப்படியே போகட்டும். விட்டு பிடி……
இல்லையென்றால் உன் கணவன் கோபத்தில் சென்றுவிடுவான். மறுபடி நீ அவன் வீட்டு வாசலில் நிற்கும்படி ஆகிவிடும். அதனால் பொறுமையாய் இரு.”
“அம்மா நான் அதேபோல் செய்கிறேன். “
குழந்தைக்காக அன்றே சகஜ நிலைக்கு திரும்புகிறான்.
அன்று இரவு முழுவதும் செழியன் ஒரே யோசனையில் இருக்கிறான்.
இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பதால் தானே இவ்வளவு பிரச்சனை.
இருவரையும் அல்லது குழந்தைகளையும் ஒன்றாக பேச வைத்தால் ஓரளவுக்காவது பிரச்சனைகள் முடியும் என்று யோசிக்கிறான்.
இரு குடும்பத்தையும் ஒன்றாக வேண்டும். என்ற எண்ணம் அவர் மனதில் மேலோங்குகிறது.
அடுத்த நாள் காலை ரத்தினா வை பள்ளிக்கு ஏற்றிக்கொண்டு செல்கிறான்.
அப்போது அவருக்கு யோசனை வர………
கார்குழலியின் வீட்டு பக்கம் செல்கிறான். அப்போது தன் மகளிடம் இங்கே உனக்கு ஒரு இன்னொரு அம்மாவும் ,தங்கையும் இருக்கிறார்கள்.
அவர்களை நாம் பார்க்க செல்லலாமா!……அப்பா…..வீட்டில் என்னோட அம்மா இருக்கிறார்கள்.
அது எப்படி இன்னொரு அம்மா. இல்லம்மா,, இவர்களும் உனக்கு அம்மா முறை தான்.
அதனால், நீ இவங்களை அம்மா என்று கூப்பிடலாம்.
நான் என் அம்மாவை தவிர வேற யாரையும் கூப்பிட மாட்டேன்.
வண்டியை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் செல்கிறான்.
ரத்தினா வோ வாசலிலேயே நின்று விட்டு உள்ளே வர மறுக்கிறாள்.
இதைப்பார்த்த கார்குழலி உள்ளே வாம்மா!….என்று கூப்பிட்டும் வர மறுக்கிறாள்.
சிறிது நேரத்தில் அழுக ஆரம்பிக்கிறாள்.
இதைப் பார்த்ததும் செழியன் அவளை பள்ளிக்கு அழைத்து செல்கிறான்.
வண்டியிலிருந்து இறங்கியதும் செழியினடம் எதுவும் பேசாமல் , முகத்தைக் கூட பார்க்காமல் அப்படியே வகுப்பறைக்கு செல்கிறாள்.
மீண்டும் நாளை சந்திப்போம்.
  • ஷண்முக பூரண்யா. அ

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!