Uncategorizedசினிமா

“இது ஏதோ பெருசா இருக்கபோது!”.. தெறிக்கவிடும் தல அஜீத்.. வலிமை வில்லனின் வைரல் ட்வீட்!

108views

தல அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

ஹிந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்த PINK திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த திரைப்படத்தில் அஜீத், வித்யாபாலன் மற்றும் பலர் நடித்தனர். இந்த திரைப்படத்தை ஹிந்தியில் தயாரித்த போனி கபூர் தமிழிலும் தயாரித்திருந்தார்.

இதனை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் அஜீத்தை 2-வது முறையாக வலிமை திரைப்படத்தில் இயக்கத் தொடங்கினார். நிரவ் ஷா ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் இந்த திரைப்படம் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி வந்தது.

இந்த திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதை அடுத்து, பட வெளியீடும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. ஒரு வழியாக வலிமை படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின. இதனிடையே படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியது. இந்த படத்தின் படக்குழு ரஷ்யா சென்று இறுதிகட்ட பணிகளை தற்போது முடித்து இந்தியா திரும்பியுள்ளது. ரஷ்யாவில் அஜீத் பங்கேற்ற மிகப்பெரிய சண்டை காட்சிகள் படமாக்கப் பட்டதாக தெரிகிறது.

எனவே திட்டமிட்டபடி 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வருவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்திருக்கிறது. இதேபோல் வலிமை படத்தின் போஸ்டர்களையும், ‘நாங்க வேற மாரி’ என்கிற முதல் சிங்கிள் பாடலையும் ஏற்கனவே படக்குழுவினர் வெளியிட்டு வலிமை படம் தொடர்பான கொண்டாட்டத்தை தொடங்கி இருந்தனர். இதே போல் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது. இவையெல்லாம் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தன.

தற்போது புதிய ஒரு கொண்டாட்டமாக வலிமை திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ (Glimpse) வெளியாகியிருக்கிறது. இதனை இன்று மாலை 6 மணி அளவில் போனிகபூர் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். தல அஜித் மற்றும் இந்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா பேசக்கூடிய ‘பஞ்ச்’ வசனத்துடன் இந்த வீடியோ தொடங்குகிறது.

அதில் தல அஜித், “நான் என்னுடைய கேமை எப்போதோ தொடங்கிவிட்டேன்!” என்று சொல்லக்கூடிய பரபரப்பான வசனமும் – பில்டிங் விட்டு பில்டிங் தல அஜித் பைக்கை முறுக்கியபடி தாவக் கூடிய ஆக்ஷன் நிறைந்த மாஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதை பார்த்த ரசிகர்களால் பட வெளியீட்டுக்காக காத்திருக்க முடியவில்லை என கூறி வருகின்றனர்.

இதனிடையே இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் கார்த்திகேயா, இந்த படத்தில் வரும் ஒரு முக்கிய வசனத்தை குறிப்பிட்டு ஒரு ட்வீட் பதிவிட்டிருக்கிறார். இந்த காட்சிகளில் தல அஜித் ஆங்கிலத்தில் “இது ஏதோ மிகப் பெரிய விஷயமாக இருக்கப் போகிறது!” என்று பேசுவார்.

இந்த வசனத்தை குறிப்பிட்டு தான், நடிகர் கார்த்திகேயா, “வலிமை முன்னோட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நான் ஒரு பகுதியாக இருக்கிறேன். தல அஜித்துடன் ஸ்கிரீன் ஷேர் செய்து இருக்கிறேன் என்பது சூப்பரான மிகவும் பெருமையான ஒரு தருணம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!