226
செழியன் இருக்கும் அறையில் நுழைந்த தேவி பயத்துடன் படபடப்புடன் இருந்தாள்.
செழியன் இங்கே வா வந்து உட்காரு என்று சொல்லி அவள் கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வை கொடுத்து பேசத் தொடங்குகிறான்.
உனக்கு என்ன பிடிக்கும் என்று பேச தொடங்கினான் செழியன்.
நேரம் கழிந்தது. இருவருக்கும் இனிமையான இரவாக அமைந்தது.
அடுத்த நாள் காலை தேவி குளித்துவிட்டு காபி எடுத்துட்டு வந்து செழியனை எழுப்பினாள்.
தூங்கி எழுந்த செழியன் கண் விழித்ததும் தேவியை பார்த்தது வான் நிலவை பார்த்தது போல பளிச்சென்று பிரகாசமாக இருந்தாள்.
“போய் குளித்துவிட்டு வாங்க கோவிலுக்கு போகலாம்” என்று சொல்ல இருவரும் கோவிலுக்கு கிளம்புகிறார்கள்.
இப்படியே இரண்டு நாட்கள் கழிகிறது. மூன்றாவது நாள் மாமியார் வீடு செல்ல தயாராகிறாள். இருந்தாலும் தாய் வீட்டை பிரிந்து செல்ல முடியாமல் வேதனையுடனும் கண்கள் ஓரங்களில் கண்ணீருடனும் அவளது உறவினர்கள் மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இதேபோல சில நாட்கள் தேவி காலையில் எழுவதும் வீட்டு வேலைகளை செய்து முடித்து கணவனை பார்த்துக் கொள்வதும் என்று அவள் நாட்கள் நகருகின்றது.
கடை வியாபாரத்தை பார்க்கத் தொடங்குகிறான் செழியன்.
அவனுக்கு உதவியாக அவன் மனைவியும் வீட்டு வேலைகளை செய்து முடித்து வைத்து அவனுக்கு உதவியாக பார்த்துக் கொள்கிறாள்.
நேரம் கிடைக்கும்போது தேவியை வெளியே கூட்டிக்கொண்டு கோவில் , சினிமா என்று பல இடங்கள் போகின்றனர்.
தேவிக்கு புடவையும், பூவும் வாங்கிக் கொடுக்கிறான்.
தேவி உனக்கு என்ன வேண்டும் என்று கேள். நான் வாங்கி கொடுக்கின்றேன்.
“உனக்கு எங்கு போகவேண்டும் என்று ஆசை என்று சொல்” அதற்கு பதில் சொன்ன
“தேவி நீங்கள் என்னோடு உங்கள் நேரத்தை ஒதுக்கி பேசினாலே போதும் அதுவே எனக்கு கடலை விட பெரியது.” என்று சொல்ல இவன் இவளது காதலால் உச்சி குளிர்கின்றான்.
சில மாதங்கள் இவர்களின் காதல் இப்படியே நகர்கின்றது.
பார்போம் இவர்களின் காதலின் ஆழத்தை.
-
ஷண்முக பூரண்யா. அ
add a comment